கோவில்பட்டி -ஒரு கிலோ தக்காளி 10 ரூபாக்கு கேட்டு தகராறு - கோவில்பட்டி நடந்த விநோத சண்டை 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் அரசின் உரிய அனுமதி பெறமால் தனியார் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. நீதிமன்றம் அந்த தனியார் தினசரி சந்தை செயல்பட தடை விதித்த பிறகும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு திட்டங்குளத்தினை சேர்ந்த குவாலிஸ் ராஜா என்பவர் நேற்று தனியார் தினசரி சந்தைக்கு சென்றுள்ளார். அங்குள்ள கடை ஒன்றுக்கு சென்று தக்காளி விலை எவ்வளவு என்று கேட்டுள்ளார்.
கடையில் தக்காளி விற்பனை செய்து கொண்டு இருந்த மகாராஜன் 1கிலோ தக்காளி 110ரூபாய் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்ட குவாலிஸ்ராஜா தனக்கு 10 ரூபாய்க்கு தக்காளி தர வேண்டும், இல்லையென்றால் நடப்பது வேறு என்று கேட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே மகாராஜன், குவாலிஸ் ராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த குவாலிஸ்ராஜா ஊரில் இருந்து தனது நண்பர்கள் சிலரை அழைத்து வந்து மகாராஜனுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் இரு தரப்பு இடையே வாக்குவாதம் முற்றியது மட்டுமின்றி, குவாலிஸ்ராஜா நண்பர்கள் மகாராஜாவை தாக்கியுள்ளனார். மேலும் தடுக்க வந்தவர்களை தாக்கியுள்ளனர். 10ரூபாய்க்கு தக்காளி கேட்டு நடந்த இந்த அடிதடி சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் மகாராஜன் கொடுத்த புகாரின் பெயரில் குவாலிஸ்ராஜா உள்ளிட்ட 5 பேர் மீதும், குவாலிஸ்ராஜாவை தாக்கியதாக மகாராஜன் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.