கமுதி உழவர் உற்பத்தியாளர் கூட்டுப்பண்ணையம் இயற்கை மரச்செக்கு எண்ணெய்! 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், கோட்டைமேடு, முதுகுளத்தூர் சாலையில் உழவர் உற்பத்தியாளர்கள் பண்ணையத்தில் கமுதி சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தங்களது வயல்களில் சாகுபடி செய்து மகசூல் பெற்ற  நிலக்கடலை எள்ளு கொப்பரை தேங்காய் ஆகியவற்றை  விவசாயிகளிடமிருந்தும் அதிக விலைக்கு கொள்முதல் செய்து  இயற்கையான முறையில் கலப்படமின்றி மரச்செக்கு எண்ணெய் வகை கூட்டுப் பண்ணையம் மூலமாக  கடலை எண்ணெய் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய்களை உற்பத்தி செய்து வெளி சந்தை  விலையை விட குறைவாக மொத்தமாகவும் சில்லறையாகவும் எண்ணெய் வகைகளை கமுதி உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுப் பண்ணையம் மூலமாக விற்பனை  செய்து வருகின்றனர், 

இது குறித்து விவசாயிகள் கூட்டு  பண்ணைய விற்பனையாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் இயற்கை விவசாயிகள் ராமர் முத்துராமலிங்கம் ஆகியோர் கூறுகையில்  வெளிச்சந்தையை விலையை விட மிகக் குறைந்த விலையில் கலப்படம் இல்லாத மரச்செக்கு எண்ணெய்களை நல்ல தரத்துடன் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்து வருகிறோம்.

கமுதி,பசும்பொன், அபிராமம், தரக்குடி, வல்லக்குளம், வல்லந்தை உள்ளிட்ட கமுதி சுற்று வட்டார பல விவசாயிகளிடம், இடைத்தரகர் இன்றி நிலக்கடலை எள்ளு கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் நேரடியாகவும் இங்கு வந்து நேரடியாக விற்பனை செய்தும் எண்ணெய் வாங்கியும் செல்கின்றனர், இதேபோன்று பொதுமக்களும் வியாபாரிகளும் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்,

நாள்தோறும் 60 லிட்டர் தயார் செய்யும் தங்களின் இலக்கு இனிவரும் காலங்களில் 100 லிட்டர் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.