விளாத்திகுளத்தில் கத்தியை காட்டிவழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த ஜெயப்பெருமாள் என்போரின் மகன் முத்தீஸ்வரன் (26). முத்தீஸ்வரன் டிரைவர் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் 20- 6- 2023 இரவு சுப்ரமணியபுரம் எட்டையாபுரம் சாலையில் ஒருவர் கத்தியை காட்டி வழிப்பறி செய்வதாக வந்தப் புகாரின் அடிப்படையில் விளாத்திகுளம் போலீசார் அங்கு சென்று பார்த்த போது முத்தீஸ்வரன் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது
இதனை அடுத்து
முத்தீஸ்வரனை கைது செய்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே முத்தீஸ்வரன் மீது சாலையில் நின்று மது போதையில் பெண்களை ஆபாசமாக திட்டுவது போன்ற உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.