கோவில்பட்டி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்தை கண்டித்து - பள்ளியை புறக்கணித்து  மாணவர்கள் மற்றும்  பெற்றோர்கள் போராட்டம் .

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ளது தலையால் நடந்தான் குளம் கிராமம். இக்கிராமத்தில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் திருமண்டலம், பன்னீர்குளம் சேகரத்தை சேர்ந்த துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆபிரகாம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பள்ளி நிர்வாகம் அவரை பணிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் ஆபிரகாமின் பணி மாற்றத்தை ரத்து செய்யவில்லை எனில் எங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என உறுதியாக கூறி வருகின்றனர். இந்த போராட்டம் பற்றி அறிந்த கயத்தாறு காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன்,

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது தலைமை ஆசிரியர் தொடர்ந்து பணியாற்றுவார். மாற்றுத்தை  ரத்து செய்து குறித்து நிர்வாகத்தில் பேசி ஒரே நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பெற்றோர்கள், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.