பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டுமென கோரிக்கை வைத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் 108 இளைஞரணி நிர்வாகிகள் அங்கபிரதட்சணை செய்து நேர்த்திக்கடன் செய்தனர்.

மோடியை ஒரு தமிழராகவே பார்க்கிறோம். அவரைப் போல தமிழுக்கு புகழை சேர்த்த ஒரு தலைவர் வரலாற்றில் இல்லை. இந்தியாவிலேயே அதிகமான சுதந்திரப் போராட்ட வீரர்களை கொடுத்த பகுதி தூத்துக்குடி மாவட்டம் ஆகும்.  தமிழ்நாட்டின் விடுதலை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தே எழுதப்பட வேண்டும்.

சுதந்திரத்திற்காக தங்களுடைய உயிரையே கொடுத்த வீரர்களின் வரலாறை உலகிற்கு எடுத்துச் சொல்லவும், தூத்துக்குடி மாவட்டம் வளர்ச்சி பெறவும், தமிழ் கடவுள் முருகனிடம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த 108 இளைஞரணி நிர்வாகிகள் அங்கப்பிரதட்சணை செய்தும் பால்காவடி எடுத்தும் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் எனவும்,

பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் திரு.தினேஷ்ரோடி அவர்களின் தலைமையில் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகளின் என 108 இளைஞர்கள் கோரிக்கை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.