அமலாக்க துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவிலிருந்து நீக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
அமலாக்கத்துறை சார்பில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவிலிருந்து நீக்க வேண்டும். திமுக அரசின் இரண்டு ஆண்டு மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பொது மக்களிடம் விளக்கும் வகையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு துவங்கி பழைய பேருந்து நிலையம், குரூஸ் பர்னாந் சிலை, பழைய மாநகராட்சி, சிவன் கோவில் தெரு, தேரடி வீதி, உள்ளிட்ட நகரில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று பொது மக்களுக்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன், அமைப்புச் செயலாளர் என் சின்னத்துரை, உள்ளிட்ட அதிமுகவினர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.
அப்போது அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவிலிருந்து நீக்கம் செய்யாமல் முதல்வர் மு க ஸ்டாலின் நாடகம் நடத்தி வருவதாக பொதுமக்களிடம் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.