பருத்தி விலை கடும் வீழ்ச்சி -ரூ.110 லிருந்து ரூ 40 ஆக குறைந்தது-மேய்ச்சலுக்கு கால்நடைகளை  வைத்து பருத்தி செடியை விவசாயிகள் அழிப்பு!

ராமநாதபுரம் கமுதி பேரையூர் புதுக்கோட்டை செங்கப்படை தோப்படைபட்டி உள்ளிட்ட கமுதி சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மானாவரி பயிராக நடப்பு ஆண்டு பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த ஆண்டு ரூபாய் 110க்கு விலை போன பருத்தி நடப்பாண்டு ரூபாய் 40க்குபருத்தி யின் விலைக்கு போவதால்  பருத்தி பறிப்பதற்கான கூலியைகூட கொடுக்க முடியாத நிலை விவசாயிக்கு ஏற்பட்டுள்ளதால் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு மெய்ச்சலுக்கு பயன்படுத்தி பருத்திச் செடிகளை முழுமையாக அழித்து வருகின்றனர்.அதனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்  அமைத்ததை போல் பருத்தி விவசாயிகளின் நிலை வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில்  பருத்தி நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைத்து பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்