ஒரு நாள் உலக கோப்பை போட்டி : இந்திய அணி வெல்ல நல்ல வாய்ப்பு - இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம் பெறலாம் - இந்திய கிரிக்கெட் அணி வீரர் அபினவ்முகுந்த்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மாடார்ன் ஹார்டுவேர்ஸ் நிறுவனத்தில் தனியார் விளம்பரதாரர் நிகழ்ச்சிக்கு வந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் அபினவ்முகுந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்.
இந்தியாவில் ஒருநாள் போட்டி உலக கோப்பை போட்டி நடைபெறவுள்ளது இந்த உலக கோப்பை போட்டி சூப்பராக இருக்கும். கிரிக்கெட் ரசிகர்களும், இந்திய மக்களும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதற்கு முன்பு சில போட்டி தொடர்கள் உள்ளன. அதில் சிறப்பாக விளையாடி விட்டு இதில் பங்கேற்றால் நன்றாக இருக்கும், உலக கோப்பை இந்திய அணியை பொறுத்தவரை தமிழகத்தினை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகவும், உள்ளுர் போட்டிகளில் அவர் சிறப்பாக ஆடி வருகிறார். இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு மைதானமும் ஒவ்வொரு தன்மை கொண்டவை, இதில் எல்லா தன்மையில் சிறப்பாக விளையாடக்கூடிய அணி உலக கோப்பையை வெல்லும், இந்தியா பாகிஸ்தான் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கதான் செய்யும், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி சிறப்பாக இருக்கும், உள்ளுரில் நடைபெறுவதால் இந்தியா வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது. மேலும் இங்கிலாந்து, ஆஸ்திரலியா, நியூசிலாந்து, தென்னப்பாரிக்கா அணிகளுக்கும் வாய்ப்ப இருப்பதாக தெரிவித்துள்ளார்.