அதிமுக ஆட்சியில் காலத்தில் கடன் வாங்கிய காரணத்தினால் நகராட்சியில் பணிகள் செய்ய முடியவில்லை நகர் மன்ற தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு,இதுதொடர்பாக கோவில்பட்டியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 

கோவில்பட்டி நகராட்சியில் ரூ.31 கோடியில் நடைபெற்று வந்த சாலை பணிகளை ரத்து செய்து விட்டதாக அதிமுக சார்பில் மக்களிடம் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வரும் நேரத்தில் ரூ.31 கோடி சாலை அமைக்க கடன் வாங்கி உள்ளனர். அவை முழு மானியமா கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால் கிடைக்கவில்லை. 60 பணிகளை அமைக்க மானியமாக கொடுத்துள்ளனர். மீதி 71 பணிகளை செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால் இந்த வேலையை நகராட்சி சார்பில் உடனே செய்ய முடியவில்லை. காரணம் என்னவென்றால் அத்தனை இடத்திலும் பைப் லைன் சரியாக இல்லை. 

நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 20 வேலை வந்துள்ளது. நமக்கு நாமே திட்டத்தில் ஒரு வேலை வந்துள்ளது. நகர்புற சாலை திட்டத்தில் 19 வேலை வந்துள்ளது. மீண்டும் 77 வேலை கேட்டிருக்கிறோம். கொடுப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். மண் சாலை எல்லாம் கணக்கெடுத்து கொடுத்து விட்டார்கள். முதலில் பைப்லைன் வேலையை சரியாக செய்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது.

நகராட்சியில் பணம் உள்ளது. வேண்டுமென்றே சாலை பணிகள் செய்யவில்லை என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர். ஆனால்  நகராட்சியில் பணம் இல்லை. பணம் இருந்தால் தான் வேலை செய்ய முடியும். இவர்கள் லோன் வாங்கியதால் தான் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அதிமுகவினர் அரசியல் பண்ணுவதற்காக இந்த நோட்டீசை மக்களிடம் கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு பகுதியாக பைப் லைன் முறையாக முடித்து வருகிறோம். இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனை வைத்து அரசியல் பண்ண வேண்டாம். கடம்பூர் ராஜூ எம்எல்ஏவிடம் நிதி இருந்தால் நகராட்சி வளர்ச்சிக்கு பைப் லைன் பதிப்பதற்கு கொடுத்து உதவ வேண்டும். கோவில்பட்டி நகராட்சி வளர்ச்சிக்கு அவருடைய நிதி கொடுத்தால் வரவேற்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அமலிபிரகாஷ், அவைத்தலைவர் முனியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.