"குரு பூர்ணிமா விழாவை" முன்னிட்டு விளாத்திகுளம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோவிலில் "குரு  பூர்ணிமா விழாவை" முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கையால் சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் உட்பட சிறப்பு மஹா அபிஷேகங்கள் நடைபெற்றது.பின்னர் தாமரை மலர்களாலான மாலையணிந்து அழகுற காட்சியிளித்த சாய்பாபாவிற்கு மாலை ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனமுருகி வழிபட்டனர்.

இறுதியாக கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பாபாவின் அருட்பிரசாதங்கள் வழங்கப்ப்ட்டன.