தூத்துக்குடியில் உள்ள நடை பயண மீனவப் பெண்களுக்கு மீன்கள் வியாபாரம் செய்வதற்காக அலுமினிய கூடை உள்ளிட்ட பொருட்களை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார். தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது நடை பயண மீனவ பெண்கள் தங்களுக்கு மீன்கள் வியாபாரம் செய்வதற்கு மீன் கூடை  வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து டூவி புரத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு 25 பெண்களுக்கு தனது சொந்த செலவில் மீன் விற்பனை செய்ய அலுமினிய கூடை மற்றும் உபகரணங்களை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.