எட்டையபுரம்: சக்கலிபட்டியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு எம்.எல்.ஏ பூமி பூஜை!

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள சக்கிலிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் நேயப்பள்ளி உள் கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 32-லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பூமி பூஜை விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்துகொண்டு கட்டுமான பணியினை துவக்கி வைத்தார்கள். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகன், பெருமாளம்மாள் பாண்டி, மாவட்ட பிரதிநிதி கார்த்திகைமுருகன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் துரைப்பாண்டியன், ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் கணேசப்பாண்டியன், கிளைச் செயலாளர்கள் திருப்பதி வள்ளியப்பன், தங்கமாரியப்பன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்...