எட்டையபுரம்: தாப்பாத்தியில் ரூ.11.97 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா!

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியம், தாப்பாத்தி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 11.97-லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம் குழந்தைகள், வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளம்மாள் பாண்டி, மாவட்ட பிரதிநிதி கார்த்திகை, ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் கணேசப்பாண்டியன், முருகன், கிளைச் செயலாளர்கள் வள்ளியப்பன், தங்க மாரியப்பன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.