தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே இலங்கை தமிழர் முகாமில் 40 குடியிருப்புகளை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டம், குளத்துவாய்பட்டி இலங்கை தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்புகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் இன்று 05.02.2024 திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி இ.ஆ.ப., விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா இ.ஆ.ப., மற்றும் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ஜவஹர், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், கோவில்பட்டி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் கல்லடிவீரன், சோலைசாமி, புதுராஜா, ராமலிங்கம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம்.ஆர்.முனியசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், எட்டையாபுரம் பாரதியார் மில் முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார், கிளைச் செயலாளர் ரமேஷ், தலைமைக் கழக பேச்சாளர் தமிழ்பிரியன் உட்பட கழக நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.