ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே எழுவனூர் கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் பொங்கல் முளைப்பாரி 10 நாள் உற்சவ விழா நடைபெற்றது.கடந்த 23 ம் தேதி திருவிழா காப்புக் கட்டு கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா துவங்கியது, நாள்தோறும் முத்து மாரியம்மன் க்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.
கடந்த 27ம் தேதி திருவிளக்கு பூஜையும் 28ம் தேதி பொங்கல் வைத்து வழிபாடு செய்தும் 29ம் தேதி காலை பால்குடம் ஊர்வலம் அம்மனுக்கு பாலாபிஷேகமும் மாலை அக்னி சட்டி அழகு வேல் குத்துதல் ஆயிரங்கண் பானை தவலும் பிள்ளை கரும்பாலைத் தொட்டில் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர் ,திருவிழாவின் நிறைவு நாளான இன்று வான வேடிக்கை மேளதாளங்கள் இசை வாத்தியங்கள் முழங்க பெண்கள் முளைப்பாரிகளை சுமந்து சென்று முத்து மாரியம்மன் ஆலயம் எழுவனூர் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக நகர் வலம் சென்று கங்கை நீரில் கரைத்தனர் ,
முன்னதாக பெண்கள் முளைப்பாறியை கீழே இறக்கி வைத்து வட்டமிட்டு கும்மியாட்டம் நடனம் ஆடி மகிழ்ந்தனர் நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு
முத்துமாரியம்மன் பொங்கல் முளைப்பாரி 10 நாள் உற்சவம் பெண்கள் கும்மியாட்டம் நடனம் உற்சாகம்!
Admin
1 நிமிட வாசிப்பு