ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளரும், ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் தந்தையும், முதுகுளத்தூர் தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா என்ற வெள்ளைச்சாமி அவர்களின் 11வது ஆண்டு நினைவு தினம் மேலராமநதி கிராமத்தில் அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது.காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி 1971 சட்டசபைத் தேர்தலில், சுயேச்சையாக வெற்றி பெற்று, தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்தார். இதன் மூலம், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நெருங்கிய நண்பரானார்.
1989ல் தி.மு.க சார்பில், முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆனார். அதன் பின், கட்சியில் பொதுக்குழு உறுப்பினர், திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். மிசா சட்டத்தின் போது சிறையில் இருந்தவர்.
அவர் மறைந்த நாளான இன்று அவரது நினைவிடத்தில் நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர்கள் முருகேசன், கோ.தளபதி ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் வாசுதேவன் மனோகரன் சண்முகநாதன் ஆறுமுகவேல் பூபதி மணி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் ஒன்றிய குழு துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார் ராஜ கண்ணப்பன் சார்பில் திலீப் கண்ணப்பன் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் என ஏராளமானோர் நினைவிடத்தில் மலர்வளையம் மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு
திமுக முன்னாள் MLA காதர் பாட்சா என்ற வெள்ளைசாமி 11_வது நினைவு தினம் திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது .
Admin
1 நிமிட வாசிப்பு