உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பாலாலயம் செப்.4காலை 9:30 முதல் 10:15 மணிக்குள் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.மீனாட்சியம்மன் கோயிலில்  2009 ஏப். 8ல் குடமுழுக்கு நடந்தது. 2018ல் கோயிலில் தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபத்தை புனரமைத்து 2 ஆண்டுக்குள் கும்பாபிேஷகம் நடத்தப்படும் என 2022ல் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.வீர வசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கும்பாபிஷேக பணிகளையும் கோயில் நிர்வாகம் துவக்கியுள்ளது.இதற்காக கோயிலின் கிழக்கு ராஜகோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு, அம்மன் கோபுரங்களுக்கு பாலாலயம் நடத்தப்படவுள்ளது.செப்., 3  காலை, மாலை யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு செப்.4ம்தேதி  காலை 9:30 முதல் 10:15 மணிக்குள் பாலாலய பூஜை  நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.