ராமநாதபுரம்
மாவட்டம் சாயல்குடி அருகே உசிலங்குளம் கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் 18ம் ஆண்டு வருட அபிஷேக விழாவை முன்னிட்டு இரட்டை
மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது,இதில் பங்கேற்ற
காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிபாய்ந்து
சென்றன.மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இரட்டை மாட்டு
வண்டிபந்தயத்தில்,
ராமநாதபுரம்
தூத்துக்குடி திருநெல்வேலி விருதுநகர் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்
இருந்து 40க்கும் மேற்பட்ட
காளைகள் பங்கேற்றன.
முதல் நான்கு இடங்களை
பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்கப் பணம் நினைவுப்பரிசு குத்து விளக்கு
பரிசாக வழங்கப்பட்டது.இந்த மாட்டு வண்டி
பந்தயத்தை சாலையின் இருபுறமும் பார்வையாளர்கள் ஆர்வமுடன் ஏராளமானோர் கண்டு ரசித்து
சென்றனர்.
தமிழ்நாடு
உசிலங்குளம் மாட்டு வண்டி பந்தயம்!
Admin
1 நிமிட வாசிப்பு