கமுதி அருகே முஸ்டகுறிச்சி கிராமத்தில் ஸ்ரீ பெத்தநாச்சியம்மன் ஆலய வருடாபிஷேக விழா இரட்டை மாட்டு வண்டி பந்தயம்,வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து சென்ற களைகள் !
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முஸ்டகுறிச்சி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பெத்தனாச்சியம்மன் ஆலய வருடாபிசேக விழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது .
பந்தயத்தித் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து வெற்றி இலக்கை நோக்கி சென்றது ,இதில் ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி விருதுநகர் சிவகங்கை மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 51 மாட்டு வண்டிகள் பந்தய வீரர்கள் ஆர்வமுடன் பப்கேற்றனர்,முதல் மூன்று இடங்களை பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்க பணம் நினைவு பரிசுகள் வழங்கபட்டது நான்காம் இடம் பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களூக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கபட்டது.மாட்டு வண்டி பந்தயத்தை கமுதி மத்திய ஒன்றிய கழக திமுக செயலாளர் சண்முகநாதன் கொடியாசித்து துவக்கி வைத்து பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.