தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் நிலையத்தில் பொய் வழக்கு போடுவதாக கூறி எலக்ட்ரீசியன் ஆட்சியர் அலுவலகம் முன்பு தலையில் மன்னென்னை ஊற்றி தீக்குளிக்க முயற்சி பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள கீழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் எலக்ட்ரீசியன் ஆன இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவருக்கும் தகராறு இருந்துள்ளது.
இதில் அருணாச்சலம் கொடுத்த புகாரின் பேரில் பாலமுருகன் மீது பசுவந்தனை காவல்துறையினர் பணத்தைப் பெற்றுக் கொண்டு காவல் ஆய்வாளர் சுரேந்தர் தன் மீது பொய் வழக்கு போடுவதாகவும் இதுகுறித்து பல இடங்களில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை .
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பாலமுருகன் இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார் இதை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தீக்குளிக்கும் என்ற பாலமுருகனை மீட்டு அவரது தலையில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர் இந்நிலையில் தண்ணீர் குறைவாக இருந்த காரணத்தின் காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றிய பாலமுருகன் ஐயோ கண் எரிகிறது கண் எரிகிறது என சுமார் ஐந்து நிமிடங்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு அழுது புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை அடுத்து மீண்டும் தண்ணீரை ஊற்றிய காவல் துறையினர் அவரை விசாரணைக்காக சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.