தமிழகம் முழுவதும் 2023 ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதிவிக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது,இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில்  இன்று நடைபெற்ற 2023ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வுக்கு விண்ணப்பித்த 5144 விண்ணப்பதாரர்களில் முதன்மை தேர்வில் 4342 பேரும் தமிழ்மொழி தகுதி தேர்வில் 4326 பேரும் தேர்வு எழுதியுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2023ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (26.08.2023) முதன்மை தேர்வு மற்றும் தமிழ்மொழி தகுதி தேர்வு என இரு பிரிவுகளாக  பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, காமராஜ் கல்லூரி, இன்னாசிபுரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய 4 தேர்வெழுதும் மையங்களில் நடைபெற்ற தேர்வினை திருநெல்வேலி சரக காவல்துறை  துணைத் தலைவர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வை பார்வையிட்டார்.தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வில் 5144 விண்ணப்பதாரர்களில் முதன்மை தேர்வில் 4342 பேரும், தமிழ்மொழி தகுதித் தேர்வில் 4326 பேரும் தேர்வு எழுதியுள்ளனர். முதன்மை தேர்வில் 802 பேரும், தமிழ்மொழி தகுதித் தேர்வில் 818 பேரும் கலந்து கொள்ளவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.