வடமாடு எருது
கட்டு விழா காளைகள் அவிழ்த்து விடப்பட்டன 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று
காளைகளை அடக்கின.
ராமநாதபுரம்
மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உலையூர் கிராமத்தில் அமைந்து அருள் பாலித்துள்ள
அருள்மிகு ஸ்ரீ மருதாருடையார் அய்யனார் கோவில் குதிரை எடுப்பு விழாவை முன்னிட்டு
வடமாடு எருதுகட்டு விழா நடைபெற்றது.
இதில்
ராமநாதபுரம் சிவகங்கை மதுரை புதுக்கோட்டை திருச்சி தேனி திண்டுக்கல் உள்ளிட்ட
பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்களாக 17 காளைகள் களம் வடம் கயிறு கட்டி அவிழ்த்து விடப்பட்டன.
நடைபெற்ற போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் காளைகளை அடக்கினர்,முதுகுளத்தூர் கமுதி பரமக்குடி லிட்டர் சுற்று
வட்டார பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஆர்வமுடன்
கண்டு ரசித்து சென்றன,இதில் 15 மாடு பிடி வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தமிழ்நாடு
முதுகுளத்தூர் அருகே வடமாடு எருது கட்டு விழா-முட்டி தூக்கிய காளை!
Admin
1 நிமிட வாசிப்பு