மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக ரேஷன் அரிசியை காரில் கடத்திய குற்றவாளி கைது - 1120 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அனிதா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பிரெட்ரிக்ராஜன், தலைமைக் காவலர்கள் திரு. காசி, திரு. மணிகண்டன், மற்றொரு திரு. மணிகண்டன், காவலர்கள் திரு. பிரபுபாண்டி மற்றும் திரு. முருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று (17.07.2023) மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அச்சங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் 28 மூடைகளில் 1120 கிலோ ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தியது தெரியவந்தது.


உடனே தனிப்படை போலீசார் மேற்படி காரின் ஓட்டுநரான தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் மகன் ராசுகுட்டி (28) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 28 மூடைகளில் இருந்த 1120 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்து தூத்துக்குடி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்.