ராமநாதபுரம்
மாவட்டம் கமுதி அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தில் வாழவந்தம்மன் ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு
நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து காளைகள்
சென்றன.
இரண்டு
பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் ராமநாதபுரம் தூத்துக்குடி
திருநெல்வேலி சிவகங்கை விருதுநகர் தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து
இரட்டை மாட்டு வண்டி பந்தய காளைகள் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.பெருநாழி -
கமுதி சாலையில் பந்தய எல்கை
நிர்ணயிக்கப்பட்டு பங்கேற்ற காளைகள்
பரிசுகளைப் பெற வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து முந்தி சென்றனர்.
முதல் நான்கு
இடங்களை பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்கப் பணம் நினைவு பரிசுகளை
வழங்கி கௌரவித்தார்.
ரேக்ளா பந்தய
மாநிலத் துணைத் தலைவர் சித்திரங்குடி ராமமூர்த்தி
காளை சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை பெற்றது.மாட்டுவண்டி
பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையில்
கண்டரிசித்தனர்.மாட்டு வண்டி
பந்தயத்தை சாலையின் இரு புறமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கண்டறித்து சென்றனர்.