தூத்துக்குடி அருகே சாயர்புரத்தில் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்து அவருக்கு மூன்று பெண் குழந்தை பிறந்ததால் தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என கூறி விவாகரத்து கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண் கைகுழைந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார்.
தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் பகுதியை சேர்ந்தவர் மகாராஜன் இவர் தனியார் காற்றாலை நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார் மகராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெப கிருபா என்ற பெண்ணை மணந்து அவரை விவகாரத்து செய்துள்ளார். இதையடுத்து முதல் திருமணத்தை மறைத்து நடுவ குறிச்சியை சேர்ந்த அன்னமணி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மூன்றாவதாக அன்னமணி கருத்தரித்த போது மகராஜன் அன்னமணியை கருவை கலைக்க சொல்லி கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்து அதை தின்று கருக்கலைப்பு செய்யசொல்லி கொடுமைப்படுத்தியுள்ளார். இதை தொடர்ந்து அன்ன மணி தனது தாய் வீட்டுக்கு தனது இரண்டு குழந்தைகளுடன் சென்ற நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மற்றொரு பெண் குழந்தை பிறந்துள்ளது இதை அடுத்து மகாராஜன் அன்ன மணிக்கு ஆண் வாரிசு இல்லாமல் மூன்று பெண் குழந்தைகள் பிறந்ததை தொடர்ந்து தனக்கு விவாகரத்து வேண்டும் எனக் கூறி தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் ஆனால் அன்ன மணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவாகரத்து வழக்கில் கையெழுத்திடாமல் உள்ளார் இதை அடுத்து மகாராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் அன்னமணியை ஒழுங்காக விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து இடு நாங்கள் மகாராஜனுக்கு வேறு திருமணம் செய்து வைக்க உள்ளோம் இல்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அன்ன மணி தனது கைக்குழந்தை உள்ளிட்ட மூன்று குழந்தைகளுடன் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்து தனது கணவர் மகாராஜன் தன்னை ஏமாற்றி முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையிலும் தனக்கு ஆண் வாரிசு இல்லை என்று தனது கணவர் கொடுமைப்படுத்தியதுடன் தற்போது விவாகரத்து வழக்கில் தனக்கு ஆதரவாக செயல்படாவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வருகிறார் மேலும் என்னிடம் விவாகரத்து பெற்றுவிட்டு மூன்றாவது திருமணம் செய்ய முயல்கிறார் என கண்ணீர் மல்க அன்ன மணி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் யிடம் மனு அளித்தார். இந்த விஷயத்தில் தலையிட்டு தனது புகார் குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.