தூத்துக்குடி சிவன் கோவில் தெருவில் மரக்கன்று நடும் பணியை சுகாதாரக் குழு தலைவர் எஸ் சுரேஷ் குமார் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி சிவன் கோவில் தெரு மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது அப்பகுதியில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவின் படி சுகாதார குழு தலைவர் எஸ் சுரேஷ் குமார் அந்த பகுதியில் மரக்கன்று நட நடவடிக்கை எடுத்தார். இதை தொடர்ந்து தூத்துக்குடி சிவன் கோவில் தெரு பகுதியில் மரக்கன்று நடும் பணியை சுகாதாரக் குழு தலைவர் எஸ் சுரேஷ் குமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் பழக்கடை குரு, டிஸ்கோ பரமு, மாநகர திமுக அயலக அணி அமைப்பாளர் அல்லாபிச்சை, பெரியசாமி, ராஜா, நேசகுமார், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.