எண் மண் ... என் மக்கள் நடைபயண பயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தனது பயணத்தை மேற்கொள்ள உள்ள நிலையில் எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் மணிமண்டபத்திற்கு சென்றார். அங்கு பாரதியார் வேடமணிந்து இருந்த பள்ளி குழந்தைகளுடன்  புகைப்படத்தை எடுத்துக் கொண்டார்.

மேலும் குழந்தைகளை வாழ்த்தினார். இதையடுத்து மகாகவி பாரதியார் இல்லத்திற்கு சென்று இல்லத்தை பார்வையிட்டு அங்குள்ள பாரதியார் உபயோகப்படுத்திய உபகரணங்கள்,  கைத்தடிகள் ஆகியவற்றை பார்வையிட்டு  பாரதியார் வாழ்ந்த வீட்டை முழுவதும்  பார்வையிட்டார், பின்னர் இல்லத்தில் உள்ள பாரதியாரின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்  அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்துயிட்டார்.