தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் எண் மண் ... என் மக்கள் நடைபயண பயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  பஸ் நிலையம் முன்பு பேசினார். அப்போது பேசுகையில், விளாத்திகுளத்தில் சூரியன் கொஞ்சம் உக்கிரமாக உள்ளன,அதிகமாக அத்தி மரமும், குளங்களும் விளாத்திகுளத்தில் ஒரு காலத்தில் இருந்ததுவிளாத்திகுளத்தில் எந்த குளத்தையும் பார்க்க முடியவில்லை,எப்போது வைப்பாற்றில் தண்ணீர் இருந்தது.  இங்குள்ள எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மணல் அள்ளியதால் வறட்டு காணப்படுகிறது, இதனால் வறட்சி ஏற்பட்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.வைப்பாற்றில் எப்போதும் தண்ணீர் நிற்காமல் வந்த காலம் உண்டு ,தென்காசி மாவட்டத்தில் உள்ள செண்பகவல்லி அணையில்  ஒரு பகுதி நீர் வைப்பாற்றுக்கும் ,  மற்றொரு பகுதி கேரளா விற்கும் சென்று கொண்டிருந்தது.வைப்பாற்றுக்கு சென்ற தண்ணீரால் தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன்பெற்றனர்.இதை வைத்து விளாத்திகுளத்தில் பருத்தி, மிளகாய் , விவசாயம் செய்தனர் ,செண்பகவல்லி அணை சேதமடைந்த போது முன்னாள் முதல்வர்கள் காமராஜர் எம்.ஜூ.ஆர் ஆகியோர் சீரமைத்தனர். பின்னர் சேதமடைந்த நிலையில் செண்பகவல்லி அணையை சீரமைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து திமுக அதை நிறைவேற்றவில்லை.விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கெண்டேயன் காற்றாலை நிறுவனத்திடன் கமிஷன் கேட்ட ஆடியோ வெளியே வந்து பரபரப்பை ஏற்படுத்தியது,விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கெண்டேயன் ஒரு குட்டி செந்தில் பாலாஜி,மதிமுக ,அதிமுக  போய் இப்போது திமுகவில் உள்ளார் ,மணல் திருடுவதை முதல் வேலையாக வைத்துள்ளார் எம்.எல்.ஏ மார்க்கெண்டேயன்.ஜெ மரணம் மோடி தான் காரணம் என்று எம்.எல்.ஏ மார்க்கெண்டேயன் பேசியுள்ளார் . இனி பேசினால் அவர் காலை எடுத்து வைக்க முடியாது,விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் 1600 ஏக்கர் மற்றும் சொத்துக்கள் உள்ளன,தனியாருக்கு நிலத்தை கொடுத்து விட்டு, திருச்செந்தூர் கோவிலுடன் கோவிலை இணைக்க முயற்சி செய்கின்றனர்.இந்து அறநிலையத்துறை சொத்தை சூறையாடி கொண்டு இருக்கிறது. இது திராவிட மாடல் அரசு .விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை இல்லை என்றால்  30 நாளில் பாஜக சார்பில் போராட்டம் நடத்துவோம்,3வது முறையாக மோடி வரக்கூடாது என்கிறார் மு.க.ஸ்டாலின்,மோடிக்கு எவ்வித குடும்பம் இல்லை,திராவிட மாடல் ஆட்சியில் நான்குநேரி பள்ளியில் ஜாதி பெயரை சொல்லி மோதியது மட்டுமின்றி , வீட்டிற்கு சென்று  மாணவனையும், அவரது தங்கையையும் வெட்டி உள்ளனர். அதில் ஒரு மாணவரின் பெரியப்பா திமுக ஒன்றிய செயலாளர் ,நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் பார்த்து விட்டு ரஜினிகாந்தை பாராட்டமால் இயக்குநரை பாராட்டியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாவின்,உதயநிதி ஸ்டாலின் நடித்த, தயாரித்த படத்தை மட்டும் முதல்வர் பார்த்து விட்டு பாராட்டுவார்,ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதியார் வாழ்ந்த மண்ணில் பள்ளியில் ஜாதி குறித்து பேசி வீட்டுக்குள் புகுந்து பட்டியலின மாணவரை வெட்டியுள்ளனர். இதற்கு திமுக ஒன்றிய செயலாளர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வந்தால் மட்டும் தான்  தமிழகத்தில் மாற்றம் வரும்  என்றார்.