கடலாடி அருகே உய்ய வந்த அம்மன் பௌர்ணமி 108 தாம்பூல புஷ்பாஞ்சலி திருவிழா!  ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மேலகிடாரம் கிராமத்தில் அமைந்துள்ள பிரஸ்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ உய்ய வந்த அம்மன் ஆலய மாதாந்திர  பௌர்ணமி பூஜை விழாவை முன்னிட்டு உய்ய வந்த அம்மனுக்கு பால்,தயிர்,சந்தன,இளநீர்,பஞ்சாமிர்தம்,விபூதி உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் தீபாதாரணை  நடைபெற்று, 108 தாம்பூல புஷ்பாஞ்சலி சிறப்பு பூஜை நடைபெற்றது.முன்னதாக திருவிளக்கு பூஜை நடைபெற்று அதனைத் தொடர்ந்து சிவன் ஆலயத்தில் இருந்து பூத்தட்டுகளுடன் அம்பாள் புறப்பாடு நகர்வலம் சென்று ஆலய வலம் சென்று உய்ய வந்த அம்மனுக்கு 108 தாம்பூல சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேலகிடாரம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.