புனிதமிக்கேல் அதிதூதர் திருவிழா தேர் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றதுராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மிக்கேல் பட்டணம் புனித மிக்கேல் அதிதூதர் தேர் பவனி திருவிழா நடைபெற்றது.கடந்த 20 ம் தேதி கொடியேற்றத்துடன் 10 நாள் பெருவிழா விழா துவங்கியது,நாள்தோறும் இரவு புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கூட்டுத் திருப்பலி சிறப்பு தியானம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று மின் ஒளி அலங்கார சப்பர புனித மிக்கில் தேர் பவனி நடைபெற்றது.நிறைவு நாளான இன்று திருவிழா நிறைவு திருப்பலி புது நன்மை பெருவிழா கொடி இறக்கம் வெகு விமர்சையாக நடைபெற்றது.  இதில் மிக்கேல் பட்டணம்,சிவகங்கை,தூத்துக்குடி,பரமக்குடி,ராமநாதபுரம்,மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்துள்ளனர்