போலீசார் -கல்லூரி மாணவிகள் மதுவிலக்கு விழிப்புணர்வு பேரணி!மதுவுக்கு அடிமையான இளைஞர்களை மீட்டு வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு ஊமை நாடகம் கல்லூரி மாணவிகள் அசத்தல்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் போலீசார் மார்னிங் கல்லூரி மாணவிகள் இணைந்து பேருந்து நிலையத்தில் மது போதை விழிப்புணர்வு குறித்து பொதுமக்கள் முன்னிலையில் ,தற்போதைய மது புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ள இளைஞர்களின் அவல நிலை குறித்தும் சமூகத்தில் அவர்களை மீட்டு வாழ்க்கையில் திறன் மேம்பாட்டிற்குசமூக அக்கறையுடன்விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,
தத்ரூபமான ஊமை வடிவிலான நாடக வடிவில் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அபிராமம் பேருந்து நிலையம் வளாகத்தில் செய்து காண்பித்து,அசத்திய கல்லூரி மாணவிகள் போலீசாரை கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டு தெரிவித்து பொதுமக்கள் அசத்தினர்.
தமிழ்நாடு
அபிராமம் போலீசார் -மாணவிகள் மதுவிலக்கு விழிப்புணர்வு பேரணி!
Admin
1 நிமிட வாசிப்பு