விளாத்திகுளம் அருகே கிராமத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தொப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா பொண்ணு இவரது மனைவி விஜயலட்சுமி (20)

ராஜா பொண்ணுக்கும் விஜயலட்சுமிக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது, ராஜா பொண்ணுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் ராஜா பொண்ணு கொய்யா, நொங்கு வியாபாரம் செய்து வரும் நிலையில், வியாபாரம் செய்து வந்த பணத்தொகை கம்மியாக கொடுத்து, குடிபோதையில் வீட்டிற்கு சென்றதால் கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மன வருத்தத்தில் இருந்த விஜய லட்சுமி  ஆஸ்பெட்டாஸ் சீட் போட்ட ஓட்டு வீட்டின் இரும்பு கம்பியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருமணம் ஆகி இரண்டு வருடங்களே ஆன நிலையில்,இளம் பெண் உயிரிழந்த தொடர்பாக

கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் விசாரணை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.