விளாத்திகுளம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, நடமாடு,பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 41 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது,சீறி பாய்ந்த காளைகளை இருபுறமும் நின்று பொதுமக்கள் கண்டு களித்தனர், இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்தை புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, தொழிலதிபர் தனலட்சுமி டிம்பர்ஸ் வாசுதேவன் மற்றும் விழா கமிட்டியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்