விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது!
தமிழக முழுவதும் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு விளாத்திகுளம் ஒன்றியம் சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது, இதில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில் ஒன்றிய தலைவர் திரு.கனவேராஜ் தலைமை தாங்கினார் பட்டியல் அணி மாவட்ட தலைவர் திரு அய்யாதுரை பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் திரு கந்தசாமி , மற்றும் புதூர் மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் திரு பெஞ்சமின் பாண்டியன், அரசு தொடர்பு பிரிவு ஒன்றிய தலைவர் திரு சீனிவாசகம் விவசாய அணி பொதுச் செயலாளர் திரு ராஜா, மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் திரு ஜெயராம், விஷ்வ இந்து பரிசத் மாவட்டத் தலைவர் திரு காளியப்பன்,மாவட்டச் செயலாளர் திரு சக்தி மாவட்ட துணைத் தலைவர் திரு சேதுராஜ் திரு முருகன் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.