தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய தங்க தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு தங்க முலாம் பூசுவதற்காக மாதா சொருபம் சிம்மாசன பீடத்திலிருந்து இறக்கப்பட்டு பலி பீடத்தில் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாதாவை தரிசனம் செய்து வருகின்றனர்.


தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலய 441 ஆண்டு திருவிழா வரும் ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றதுடன் துவங்கி 16வது தங்கத் தேர் திருவிழா வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்காக தங்க தேர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாதா கோவிலில் சிம்மாசனத்தில் இருக்கும் மாதா சொருபம் தங்க முலாம் பூசுவதற்காக கீழே இறக்கப்பட்டு பலி பீடத்தில் பொதுமக்களின் தரிசனத்திற்காக இரண்டு நாட்கள் வைக்கப்பட்டுள்ளது தங்க கிரீடத்துடன் காட்சியளிக்கும் மாதாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து ஜெபமாலை மற்றும் பல்வேறு பொருட்களை குழந்தைகளை மாதாவின் பீடத்தில் வைத்து ஆசி பெற்று வருகின்றனர்.