தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரனி கிராமத்தில் கல்விக் கடனை கட்டாத காரணத்தினால் நகையை திருப்பி தராத ஆத்திரத்தில் வாலிபர் வங்கி மேலாளர் மற்றும் வங்கி ஊழியர் மீது தாக்குதல். பரபரப்பு.

தூத்துக்குடி புதிய முனியசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் இவர் தனது மகன் இசக்கி செல்வம். பெயரில் தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரனி கிராமத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் கடந்த 2016 ஆம் ஆண்டு கல்வி கடன் வாங்கியுள்ளார் ஆனால் இந்த கல்வி கடனை முறையாக அவர் கட்டாமல் இழுத்து அடித்து வந்துள்ளார்.

மேலும் பொன்ராஜ் இதே வங்கியில் தனது நகையையும் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார் இந்நிலையில் கல்வி கடனை கட்டாத காரணத்தின் காரணமாக நகையை திருப்பித் தர மாட்டோம் என வங்கி மேனேஜர் திவாகர் பொன்ராஜிடம் கூறியுள்ளார்.


இதைத் தொடர்ந்து பொன்ராஜ் இன்று காலை தனது மகன் இசக்கி  செல்வதுடன் வங்கிக்கு வந்து வங்கி மேலாளர் திவாகருடன் பேசி உள்ளார் அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இசக்கி செல்வம் வங்கி மேலாளர் திவாகர் மற்றும் வங்கி ஊழியர் ஈஸ்வரன் ஆகியோரை வங்கியின் உள்ளே வைத்து தாக்கியுள்ளார் மேலும் அலுவலகத்தில் இருந்த பொருட்களையும் கீழே தள்ளி சேதப்படுத்தி உள்ளார்.

இசக்கி செல்வம் தாக்கியதில் காயமடைந்த வங்கி மேலாளர் திவாகர் மற்றும் வங்கி ஊழியர் ஈஸ்வரன் ஆகியோர்  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர் இசக்கி செல்வம் மற்றும் அவரது தந்தை பொன்ராஜ் ஆகியோரை தாளமுத்து நகர் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.