கமுதி அருகே மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது-52 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன! ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கோவிலாங்குளம்பட்டியில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில், ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான காதர்பாட்சாமுத்துராமலிங்கம் இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்இப்போட்டி கோவிலாங்குளம்பட்டியிலிருந்து கமுதி சாலையில் 14 கி.மீ எல்கை நிர்ணயிக்கப்பட்டு பெரியமாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.இதில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 52 மாட்டு வண்டிகள், வீரர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும், வெற்றி பெற்ற முதல் 4 இடங்களை பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம், குத்துவிழக்கு, நினைவு பரிசு வழங்கப்பட்டது.முன்னதாக 300 பெண்களுக்கு இலவசமாக சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் கமுதி மத்திய ஒன்றிய செயளாளர் எஸ்.கே.சண்முகநாதன், வடக்கு ஒன்றிய செயளாளர் வாசுதேவன் உள்பட மற்றும் கமுதி, சாயல்குடி, கோவிலாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாலை நெடுகிலும் நின்று பார்வையிட்டு சென்றனர்.