கமுதி அருகே கருங்குளம் சக்தி மாரியம்மன் 23 ஆம் ஆண்டு ஆடி பொங்கல் உற்சவம் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும், அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலய 23 ஆம் ஆண்டு ஆடி பொங்கல் உற்சவ விழா 10நாள் திருவிழா ,யாகசாலை பூஜை கணபதி ஹோமம்  பூஜையுடன் விழா தொடங்கியது, அதனைத் தொடர்ந்து சக்தி மாரியம்மன் அம்மனுக்கு 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்கார தீபாவனை நடைபெற்றது.முன்னதாக மேளதாளம் வான வேடிக்கையுடன் அம்மன் உருவம் பொறித்த   கொடியை  கிராம நகர்வலம் ஆலயம் சென்று கொடியேற்றம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு அபிஷேக தீபாதாரணை நடைபெற்றது,பக்தர்கள் அனைவருக்கும் கேழ்வரகு கம்மங்கூழ் பிரசாதமாகவும்  அன்னதானம் வழங்கப்பட்டது  பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராமத் தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் நாகரத்தினம் கமுதி ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் சித்ரா தேவி அய்யனார் கிராம செயலாளர் செல்லச்சாமி பொருளாளர் ஆறுமுகம் செய்து வருகின்றனர்.