"எங்கேயோ இருந்து வந்தவங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க... எங்களுக்கு ஏன் பண்ண மாட்டிக்காங்க?" - காலிக்குடங்களுடன் பெண்கள் ஆவேசம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் இருந்து சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சீவலப்பேரி மற்றும் குடிநீர் பைப் லைன்கள் செல்லும் பாதையின் மீது தனியார் காற்றாலை நிறுவனத்தினர் தங்களது வாகனங்கள் செல்வதற்காக சரளை மண் கொட்டி பாதை அமைத்து சென்று வருகின்றனர். இதன் காரணமாக அந்த பைப் லைன்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பிள்ளையார்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட பிள்ளையார்நத்தம், கே.குமரெட்டியபுரம், சுப்பிரமணியபுரம் ஆகிய கிராமங்களுக்கு பல நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று காலி குடங்களுடன் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், பைப் லைன் செல்லும் பாதையில் கொட்டப்பட்ட சரளை மணலை அப்புறப்படுத்தி பாலம் அமைத்து வேண்டுமானால் காற்றாலை நிறுவன வாகனங்கள் செல்லட்டும் என கூறுகின்றனர். அதேபோன்று தங்களது குடிநீர் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தூத்துக்குடி
காலிக்குடங்களுடன் பெண்கள் ஆவேசம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.எல்.ஏ.,காதர்பாட்சாமுத்துராமலிங்கம் இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அடுத்த
தமிழக அரசு 12 1/2 லட்சம் கோடி கடனில் உள்ளது விரைவில் திவாலாகும்:பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026