தூத்துக்குடி தமிழக அரசு 12 1/2 லட்சம் கோடி கடனில் உள்ளது விரைவில் திவாலாகும் நிலைமை ஏற்படும் என்எல்சிக்கு நிலத்தை கையகப்படுத்த முடிவை தமிழக அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் நேற்று நடைபெற்ற போராட்டம் சாம்பிள் தான் இனிமேல் பல்வேறு கட்ட போராட்டங்கள் கோடி பேரை திரட்டி நடத்தப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி! நெல்லையில் பாமக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று பிற்பகல் வந்தார் அப்போது அவர் செய்தியாளரிடம் கூறுகையில்,தென்மாவட்டங்கள் வளர வேண்டும் வளர்ச்சி பெற வேண்டும் என தொடர்ந்து. பாமக போராடி வருகிறது.2000ம் ஆண்டில் நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்கி 23 ஆண்டுகளாகியும் 13 நிறுவனங்களில் 600 பேருக்கு வேலை கொடுக்கப்பட்டது.இன்னமும் நாங்குனேரி சிறப்பு பொருளாதர மண்டலம் வளர்ச்சி அடையவில்லை.நெய்வேலியில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டம்.அந்தப் போராட்டத்தில் காவல்துறையினரை ஏவி விட்டு தொண்டர்கள் மண்டை உடைக்கப்பட்டுள்ளது ,பதட்டமான சூழ்நிலை உருவாக்கியது காவல்துறை.திமுக அரசுக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் சொல்லிக் கொள்வது எல்லாம் விவசாய விரோத போக்கை கடைபிடிக்க கூடாது என எச்சரிக்கை விடுகிறேன்.உங்களது கவுண்டவனை என்.எல்.சியில் தொடங்காதீங்க.நெய்வேலியில் விவசாயிகள் போராட்டம் மட்டுமல்ல தமிழ் சமூகத்திற்கான போராட்டம்.மனசாட்சியில்லாமல் பேய் போல் என்.எல்.சியில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.திமுக என்எல்சி அதிகாரிகளுடன் ஆதரவாக செயல்பட்டு வருகிறது.நெல்லுக்கு இழப்பீடு தரப்படும் என ஆட்சியர் சொல்கிறார்.தயவுசெய்து என் எல் சி நிகழும் கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நேற்றைய போராட்டம் வெறும் சாம்ப்ள் தான்என்.எல். சியை விட்டு விடுங்கள் அது உங்கள் வேலை கிடையாது மண்ணுக்கும் மக்களுக்குமான போராட்டம், நாங்கள் சொன்னால் கோடிகணக்கானோர் ஒன்று திரள்வார்கள்.தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இளைஞர்களும் ஒன்றிணைந்து என்எல்சிக்கு எதிராக போராட்டத்தை நடத்த வேண்டும்.திமுக ஆட்சியில் என்எல்சி போன்ற விளைநிலங்களை கையகப்படுத்தி நாசப்படுத்தினால் இரண்டு ஆண்டுகளில் அரிசி ரூபாய் 500க்கு மேல் விற்கபடும்,2000 போலீஸை வைத்து விவசாயிகளை அச்சுறித்திவருவது கோலைதானம்.தங்கம் தென்னரசுக்கு எச்சிரிக்கை விடுகிறேன்.நிலத்தை அழித்தால் சோறு கிடைக்காது என நீதிபதி சொல்லியும் இன்று மீண்டும் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.என்.எல்.சி திட்டம் வளர்ச்சி திட்டம் கிடையாது.மன்னையும் மக்களியும் அழிக்கும் திட்டம் எங்களுக்கு வேண்டாம்.ஜி.20 மாநாட்டில் சுற்று சூழல் அமைச்சர்கள் ஒன்றிணைந்து நிலக்கரி பயன்பாட்டை குறைப்பதை பற்றி பேசப்பட்டது.ஆனால் அங்கிருந்து சில கிலோமீட்டரில் விவசாய நிலத்தை அளிக்கும் நிலை உருவாகியுள்ளது.தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறிவிட்டது.தமிழகத்தின் மின்சாரம் வெளி மாநிலத்திற்கு விற்கும் நிலை உருவாகிவிட்டது என்றால் என்.எல்.சிக்கு எதுக்கு நிலம்,கோடி கணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சி கடலுக்கு அனுப்பி கொண்டிருக்கும் மோசமான திட்டம் என்.எல்.சியில் நடக்கிறது.என்.எல்.சியில் இருந்து சில கிலோமீட்டரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்த வரவேண்டும்,தங்கம் தென்னரசு பள்ளியில் படிக்கும் போதிருந்தே என்.எல் சிக்கு எதிராக பாமக போராட்டம் நடத்தி வருகிறது.அமைதியாக நடத்திவந்த போராட்டத்தில் காவல்துறையை ஏவிவிட்டு வன்முறையை உருவாக்கியுள்ளனர்.என்.எல்.சிக்கு எதிராக தொடரந்து போராட்டத்தை நான் முன்னெடுத்து வந்துள்ளேன்.தலைமை செயலகத்தில் அழையா விருந்தாளியாக சென்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் முன்னிலையில் 40 நிமிடங்கள் தலைமை செயலாளர் முன்னிலையில் வாதிட்டேன்,இதனை குறுகிய அரசியல் என சொல்கிறார்கள்.
என்.எல்.சி குறித்து அண்ணாமலை பேசியிருப்பது வேடிக்கையாக உள்ளது,அன்புமணிஅன்னூரில் சிப்காட்டில் நிலம் கையகபடுத்தும் போது தடுத்து நிறுத்த ஏன் அண்ணாமலை போராட்டம் நடத்தினார்.அங்கு தமிழர்களுக்கு வேலை கிடைக்காதா?3000 ஏக்கர் தரிசு நிலத்திற்காக அண்ணாமலை,எடப்பாடி போன்றோர் போராட்டம் நடத்தினார்கள்.காவிரி டெல்டாவில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அழிக்கலாம் அன்னூர் பகுதியில் அழிக்ககூடாது.முதல்வரும் டெல்டா காரன் என சொல்கிறார்.தஞ்சை மாவட்டம் மட்டும் டெல்டா மாவட்டம் என முதல்வர் நினைக்கிறார்கள்.டெல்டா மாவட்டமான கடலூரில் நிலம் எடுப்பதை கண்டு டெல்டா காரன் என சொல்லும் முதல்வருக்கு உணர்வில்லையா?அன்புமணிதாமிரபரணி நதி இணைப்பு திட்டம் பல ஆண்டுகளக கிடப்பில் போடப்பட்டுள்ளது.அதனையெல்லாம் தமிழக நிதி துறை அமைச்சர் பார்க்கட்டும்,தமிழகத்தில் கடன் சுமையை தங்கம் தென்னரசு குறைக்கட்டும்.கடன் வாங்கவில்லை என சபாநயகர் கூறிவருகிறார். அவருக்கு ஒருகடிதம் எழுத வேண்டும்.கடனை அடைக்க கடன் வாங்கியது திமுக ஆட்சியில் தான்.இந்த வேடிக்கை வேறு எங்கும் பார்க்க முடியாது.தமிழகத்தின் மொத்த கடன் 12.53 லட்சம் கோடி,இதில் பொதுத்துறை கடன் 4.5 லட்சம் கோடி,நிர்வாகத்துறை கோடி 7.25 லட்சம் கோடி. அதிமுக ஆட்சி கடன் வாங்கிகொண்டிருக்கிறார்கள் என திமுக குறை சொன்னது.2 ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளனர்.இந்த ஒரு ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 43 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.பழைய கடனை அடைத்து அதற்கு வட்டி கட்டுவதற்கு 51 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர்.கடன் தொடர்பான இதே நிலை தொடர்ந்தால் தமிழ்கம் திவாலாகிவிடும்.NDA கூட்டணியில் நாங்கள் டெல்லியில் இருக்கிறோம்.தமிழக NDA கூட்டணியில் இல்லை.அமித்ஷா கூட்டத்தில் கலந்து கொள்வதை விட நேற்றைய தினம் மிகப்பெரிய பிரச்சனைக்கான போராட்டத்தில் இருந்தோம். நெய்வேலியில் என்.எல் சியில் இருந்து திமுகவின் கவுண்டன் ஸடார்டாக ஆரம்பமாக வேண்டுமாஅன்புமணி ராமதாஸ் பேட்டி! .