நெல்லையப்பர் காந்திமதி கோவில் தேரோட்டதிற்கு தேர் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது!
நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது.
சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று.இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது.மேலும் தேரோட்டம் அன்று 5 தேர் கோவிலை சுற்றிய நான்கு ரத வீதிகளிலும் மக்களால் இழுத்து செல்லப்பட்டு நிலை நிறுத்தப்படும்
தேரோட்டம் அடுத்த மாதம் 2ம் தேதி நடைபெறுவதையொட்டி இன்று தேரை தீயணைப்பு துறையினர் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.