பழனி அரசு ஆஸ்பத்திரியில் மனைவியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற கணவர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி வி.கே.மில்ஸ் பகுதியை சேர்ந்த மணியன்(40) இவரது மனைவி கற்பகபிரியா (35)
இந்நிலையில் கற்பகபிரியாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இன்று காலை தனது மனைவியை பார்க்க வந்த மணியன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை வெட்டினார். இதனால் கற்பகபிரியா உயிருக்கு பயந்து ஓடினார். இருந்தபோதும் அவரை துரத்தி சென்ற மணியன் கை மற்றும் கால்களில் சரமாரியாக வெட்டினார்.
பின்னர் மணியனை ஆஸ்பத்திரி ஊழியர்கள் பிடித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்