இந்திய விடுதலைப்போராட்டத் தியாகி வாஞ்சிநாதன் அவர்களுடைய 112வது நினைவுதினம் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் சார்பாக கோவில்பட்டி காயத்திரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு அபிராமி முருகன் தலைமை வகித்தார், வழக்கறிஞர் சந்திரசேகர்  முன்னிலை வகித்தார்.விழாவில் இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநிலச்செயலாளர் க.தமிழரசன், வழக்கறிஞர் ஜெயஶ்ரீ மற்றும் முனைவர். ஆ.சம்பத்குமார் நினைவேந்தல் உரை ஆற்றினார்கள்.நிகழ்ச்சியில் காயத்ரி திருமண மண்டபத்தின் நிர்வாகி ராதாகிருஷ்ணன், ஐஎன்டியுசி தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ராஜசேகரன், தமிழ்நாடு காமராஜர் பேரவையின் நிறுவனர் நாஞ்சில் குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஆவல்நத்தம் லட்சுமணன், நடராஜபுரம் தெரு பொதுமக்கள் நலச்சங்கத்தின் தலைவர் செண்பகம், தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் மேரிஷீலா, மாவீரன் பகத்சிங் இரத்ததானக் கழக அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், பறையர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தாவீது ராஜா, வழக்கறிஞர் விஜயகுமார், அஇஅதிமுக ஒன்றிய துணைச்செயலாளர் ஔவையார் செல்வம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வாஞ்சிநாதன் திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து மலர்தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது.