முதுகுளத்தூர் அருகே வடக்கு வாசல் செல்லி அம்மன் கோவில் முளைப்பாரி விழா விவசாயத்திற்கு பருவ மழை பெய்து அதிக மகசூல் கிடைக்க வேண்டி பெண்களுடன் ஆண்கள் 1008 முளைப்பாரியை வளர்த்து நேத்திக்கடன். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு விவசாய பணிகளுக்கு பருவ மழை பெய்து அதிக மகசூல் கிடைக்க வேண்டி  ஆண்கள் 1008 முளைப்பாரிகளை சுமந்து சென்று தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினார்.செல்வநாயகபுரம் கிராமத்தின் சார்பில் வருடாந்திர முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் முளைப்பாரி உற்சவ விழா நடைபெற்றது. செல்வநாயகபுரம் கிராமத்தில் விநாயகர் ஆலயத்தில் வான வேடிக்கை மேளதாளம் இசை வாத்தியங்களுடன் துவங்கிய 1008 முளைப்பாரியை பெண்களுடன் ஆண்களும் தங்களது தலையில் சுமந்து அபிராமம் பரமக்குடி சாலைகளின் வழியாக 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஊர்வலமாக முதுகுளத்தூர் முக்கிய வீதிகள் நகர்வலம் சென்று செல்லி அம்மன் ஆலயம் வந்தடைந்தது, அதன்பின்னர் முளைப்பாறியை இறக்கி வைத்து வட்டமிட்டு  பெண்களுடன் ஆண்களும் கும்மி பாடலுக்கு கும்மியாட்டம் நடனம் ஆடி அதன் பின்னர் கங்கை நீரில் முளைப்பாறியை கரைத்து வழிபட்டனர், இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக செல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.