தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தை சேர்ந்த வட்ட கோவில் பகுதியில் அமைந்துள்ள எபநேசர் ஆலயத்தில்  திருச்சபை மக்களுக்கு எதிராக செயல்படும் குருவானவர் ஜெபக்குமார் ஜாலியை மாற்றக்கோரி எபனேசர் ஆலயத்தின் உள்ளே சபை மக்கள் 50க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம் பரபரப்பு.தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தை சேர்ந்த வட்டக்கோவில் பகுதியில் அமைந்துள்ளது எபநேசர் ஆலயம் இந்த ஆலயத்தில் குருவானவராக ஜெபக்குமார் ஜாலி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.ஜெபக்குமார்  ஜாலி இந்த ஆலயத்தில் குருவானவராக பதவி ஏற்றது முதல் திருச்சபை நிர்வாகிகள் மற்றும் சபை மக்களுக்கு எதிராகவும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது எனவே இவரை உடனடியாக மாற்ற வேண்டும் என ஏற்கனவே இந்த ஆலயத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சபை மக்கள் உள்ளிருப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.இதைத் தொடர்ந்து காவல்துறை மூலம் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது இந்த பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவிற்கு குருவானவர் தரப்பு ஒத்துக் கொள்ளாமல் தற்போது சபை மக்கள் திருமண நிகழ்வு மற்றும் இறப்பு நிகழ்வு மற்றும் ஜெப கூட்ட நிகழ்வு ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்காமல் குருவானவர் ஜெபக்குமார் ஜாலி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இவ்வாறு சபை மக்களுக்கு எதிராக செயல்படும் குருவானவர் ஜெபக்குமார் ஜாலியை  உடனடியாக எபநேசர் ஆலயத்திலிருந்து மாற்ற நாசரேத்  திருமண்டல நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எபநேசர் ஆலய த்தின் உள்ளே சபை மக்கள் 50க்கும் மேற்பட்டோர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதைத்தொடர்ந்து ஆலய வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.