17ஆம் நூற்றாண்டு சேர்ந்த தமிழர்களின் பாரம்பரிய வீர கலையான வர்ம அடவுமுறை  நாட்டு அடி மற்றும் சுவடுகள் குறித்த பயிற்சி முகாம் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆசான்கள் பங்கேற்பு.தூத்துக்குடியில் அப்துல் கலாம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளி சார்பில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த பாரம்பரிய விளையாட்டான வர்ம அடிமுறை அடவு சுவடிகள்முறைகளை மாங்காடு ஆசான் வழியில் வந்த ஷாஜி மாஸ்டர் தலைமையில் பயிற்சியாளர் அருண்குமார் ஏற்பாட்டின் பேரில் அழிந்து வரும்17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழர்களின் பாரம்பரிய வீர கலைகளான வர்ம அடவுமுறை மற்றும் நாட்டு அடி சுவடுகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.இந்த பயிற்சி முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு தங்களது பாரம்பரிய வீர கலையின் அடவு முறைகளை  செய்து காண்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் கலந்துகொண்டு மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தினார் மேலும் இந்த பயிற்சி முகாமில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சிலம்ப ஆசான்கள் கலந்து கொண்டனர்.இநிகழ்ச்சிக்கான் ஏற்ப்பாடுகளை அப்துல்கலாம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் ஆசான் அருண்குமார் செய்திருந்தார்.