தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குறளையம்பட்டி அருள்மிகு ஸ்ரீ முனியசாமி கோவில் ஆனி மாத கொடை விழாவை முன்னிட்டு  சாமி புறப்பாடு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.இதனை ஒட்டி நையாண்டி மேளத்துடன் கிராம பெண்கள்  ஆண்கள் என அக்னிசட்டி ஏந்திவாறு  ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்து  தங்களது நேர்த்திக்கடனை  செலுத்தினர், இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.