கூவலாபுரம் சுந்தரமூர்த்தி சுவாமி மகா கும்பாபிஷேக விழாவிற்கு எட்டையாபுரம்  அதிமுக சார்பில் நன்கொடை!

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் கூவலாபுரம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி ஆலய மகா கும்பாபிஷேக விழா  வருகின்ற 25-06-2026 ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

மேலும் மாபெரும் அன்னதானம், அயோத்தி ரெட்டி குல கிராமங்களின் பெண்கள் கும்மி, ஆண்கள் ராமாயண ஒயிலாட்டம், பக்தி பஜனை இன்னிசை, பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு  நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

நடைபெறவிருக்கும் மகா கும்பாபிஷேகத்திற்கு  விழாவை சிறப்பிக்க உதவியாக எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜ்குமார் நன்கொடையை வழங்கினார், இந்நிகழ்வில் மகா கும்பாபிஷேக விழா கமிட்டியினர் உடன் இருந்தனர்.