விளாத்திகுளம் அருகே பட்டப்பகலில் வைப்பாற்றிலிருந்து சட்டவிரோதமாக பெட்ரோல் மோட்டார் மூலம் லாரிகளில் தண்ணீர் திருட்டு!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்துலாபுரம் வைப்பாற்று பகுதிகளில் சட்டவிரோதமாக ஜேசிபி வாகனத்தின் மூலம் ஊற்றுத்தோண்டி, பெட்ரோல் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் லாரி மற்றும் தண்ணீர் டிராக்டர்கள் மூலமாக நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் லிட்டர் அளவிற்கு மேல் வைப்பாற்றிலிருந்து தண்ணீரை அரசின் அனுமதி பெறாமல்   சட்டவிரோதமாக திருடி வருகின்றனர்.

மேலும், விளாத்திகுளம் பகுதிகளில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடி வரும் நிலையில், விளாத்திகுளம் பகுதிகளில் இதுபோன்று தொடர் தண்ணீர் திருட்டை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தடுத்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு வரும்‌ நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்