கோவில்பட்டி அருகே விவசாய நில பாதையில் கனரக வாகனங்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து ,  வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பேரூராட்சி பகுதியான புதுக்கோட்டை வழியாக அப்பகுதியில் அமைக்கப்படும் தனியார் காற்றாலை நிறுவனங்களுக்கும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள காற்றாலைக்கும் கனரக வாகனங்கள் சென்று வருவதாகவும், விவசாய நிலங்கள் இடையே உள்ள பாதையில் கனர வாகனங்கள் செல்வதால் ,, விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பருத்தி, வெண்டைக்காய் , மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் புழுதியால் பாதிக்கப்படும் நிலை இருப்பதாகவும்,, மேலும் பயிர்கள் கரிக்கிடுவதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் ,, எனவே விவசாய நிலத்தின் வழியே உள்ள பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கு வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், தனியார் காற்றாலைக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனத்தினை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் மற்றும் தனியார் காற்றாலை நிறுவனத்தை அழைத்து பேசி, பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று காவல்துறை உறுதி அளித்தை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்